என் நிலைமை எதிரிக்குக்கூட வரக்கூடாது: பாடகி சுசித்ரா வேதனை!

என் ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியான எந்தவொரு ட்வீட்டையும் நான் வெளியிடவில்லை. யாருக்கும் அதில் சந்தேகம் வேண்டாம். 
என் நிலைமை எதிரிக்குக்கூட வரக்கூடாது: பாடகி சுசித்ரா வேதனை!

சில மாதங்களுக்கு முன்பு, பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ் மற்றும் இதர பிரபலங்களைப் பற்றி பல்வேறு விதமான ட்வீட்கள் வெளியாகின. இதனால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேச் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் என தனிப்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டதால் தமிழ்த் திரையினர் மிகுந்த கவலையடைந்தனர். தற்போது அத்தகைய புகைப்படங்களும் வீடியோக்களும் அவருடைய ட்விட்டர் கணக்கிலிருந்து அகற்றப்பட்டன. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கும் நீக்கப்பட்டது. இதனால் சுசித்ராவின் ட்விட்டர் சர்ச்சைகளுக்கு முடிவுகட்டப்பட்டது. 

இந்நிலையில் நடந்த சம்பவங்கள் குறித்து பாடகி சுசித்ரா ஒரு நாளிதழுக்குப் பேட்டியளித்தாவது:

இது நடந்து இரு மாதங்கள் ஆனாலும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், நடிகர், நடிகைகள் எனப் பலரையும் சிரமத்துக்கு ஆளாக்கியதால் இன்னும் அந்த வேதனையில் உள்ளேன். நடந்ததை எண்ணி மிகவும் வருத்தப்படுகிறேன். என்னுடைய ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியான தகவல்கள், வீடியோவுக்கு நான் பொறுப்பல்ல என்றாலும் அதனால் என்னால் ஆறுதல் அடைய முடியவில்லை. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். என் மனநிலை குறித்து என் கணவர் கூறியதைத் தற்போது சரிசெய்துவருகிறேன். இப்போது முன்னேறியிருக்கிறேன். 

இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேலையில் இன்னும் தீவிரமாக உள்ளேன். பிப்ரவரி 19 அன்று என் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை அறிந்தேன். அதைத் தடுக்க என் வழியில் மிகவும் முயன்றேன். காவல்துறையில் எப்போது வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். இந்தச் சம்பவங்கலால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அப்போது என் உடல்நலம் குறித்து முடிவெடுக்கவே என் குடும்பத்துக்கு முக்கியமானதாக இருந்தது. 

நடைபெற்ற சம்பவங்களால் நான் மிகவும் சங்கடம் அடைந்துள்ளேன். என் ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியான எந்தவொரு ட்வீட்டையும் நான் வெளியிடவில்லை. யாருக்கும் அதில் சந்தேகம் வேண்டாம். 

என்னால் பாதிக்கப்பட்டவர்களிடன் மன்னிப்பு கோருகிறேன். எனக்குத் திரைத்துறையில் எதிரிகள் கிடையாது. இதனால் யார் நட்பையும் இழக்கவில்லை என நம்பிக்கை வைக்கிறேன். இந்தத் துறையில் பாலியல் தொல்லைகளை நான் சந்தித்ததில்லை. எல்லோரும் என்னைக் கெளரவமாக நடத்திவருகிறார்கள். 

என் நிலைமை எதிரிக்குக்கூட வரக்கூடாது. எல்லாம் முடிந்தது என்று எண்ணியிருந்தேன். மனநல பாதிப்பிலிருந்து மீண்டுவர ஆறு வாரங்கள் ஆனது என்று பேட்டியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com