Enable Javscript for better performance
Amazon Obhijaan | Official Trailer ( Tamil )- Dinamani

சுடச்சுட

    
    Amazon_Obhijaan7

     

    அமேஸான் ஒபிஜான் என்கிற பெங்காலி பட டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. பெங்காலி பட டிரெய்லராக இருந்தாலும் ஆங்கிலப் படங்களுக்கு நிகரான அதன் பிரமாண்டம் சினிமா ரசிகர்களை மிகவும் ஈர்த்துள்ளது. அமேஸான் காடுகளில் நிகழும் சாகசக் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஜங்கிள்புக் படத்தை நினைவூட்டும் காடுகள் தொடர்பான காட்சிகளால் குழந்தைகள் இப்படத்தை ரசித்துப் பார்ப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

    கமலேஸ்வர் முகர்ஜி இயக்கத்தில் தேவ், ஸ்வேத்லனா, குலகோவா, டேவிட் ஜேம்ஸ் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். 

    இந்த டிரெய்லரைக் கண்ட பலரும் சமூகவலைத்தளங்களில் உடனடியாகப் பகிர்ந்ததால் முதல் 10 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 

    பெங்காலி, ஹிந்தி, தமிழ், ஒரியா, அஸ்ஸாமீஸ், தெலுங்கு என ஆறு மொழிகளில் வெளியாகும் முதல் பெங்காலி படம் என்கிற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது. 

    டிசம்பர் 22 அன்று இந்தப் படம் வெளிவரவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai