சுடச்சுட

  

  இயக்குநர் பால்கியின் பேட்மேன் பட இசையமைப்பாளர் - அமித் திரிவேதி!

  By எழில்  |   Published on : 04th December 2017 03:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  padman_akshay11xx

   

  சீனிகம், பா, ஷமிதாப், கி & கா என இதுவரை தான் இயக்கியுள்ள அனைத்து படங்களிலும் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் தமிழரும் பிரபல இயக்குநருமான பால்கி.

  ஆனால் அடுத்த மாதம் வெளிவரவுள்ள பேட்மேன் படத்தில் இளையராஜாவைத் தவிர்த்துவிட்டு இசையமைப்பாளர் அமித் திரிவேதிவுடன் இணைந்துள்ளார். 

  கி & கா படத்தில் இளையராஜா தவிர மிதூன், மீட் ப்ரோஸ் ஆகியோரும் இசையமைப்பாளர்களாகப் பணியாற்றினார்கள். இந்நிலையில் அடுத்தப் படத்தில் இளையராஜாவை விட்டு விலகியுள்ளார் பால்கி. 

  இளையராஜாவின் தீவிர ரசிகரான பால்கி, இந்த முடிவை எடுத்திருப்பது இளையராஜா ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட பேட்மேன் போஸ்டர்களில் இசையமைப்பாளரின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் இந்தப் படத்துக்கும் இளையராஜா தான் இசை என்று தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில் அமித் திரிவேதியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

  பால்கி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேட்மேன்' (PadMan) என்கிற ஹிந்திப் படத்தில் அக்‌ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம்.

  தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் குறைந்த விலையில் எப்படி சானிடரி நாப்கின் தயாரித்தார் என்பது பற்றிய உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிவருகிறது. நடிகை டிவிங்கிள் கண்ணா இப்படத்தின் தயாரிப்பாளர். ஜனவரி 26-ம் தேதி வெளியாகவுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai