ஹெச்.சி.எல். நிறுவன ஊழியர் செய்த உதவி: விபத்தில் உயிர் தப்பிய கெளதம் மேனன் உருக்கம்!

கோபாலகிருஷ்ணன் செய்த உதவியால் மனிதாபிமானத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டேன். மீண்டும் படப்பிடிப்பு தொடங்க...
ஹெச்.சி.எல். நிறுவன ஊழியர் செய்த உதவி: விபத்தில் உயிர் தப்பிய கெளதம் மேனன் உருக்கம்!

சென்னை, ராஜீவ்காந்தி சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் பிரபல திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

தமிழ் திரைப்படத் துறையில் இயக்குநராக இருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் "மின்னலே', "வாரணம் ஆயிரம்', "காக்க...காக்க', "வேட்டையாடு விளையாடு', "நீதானே என் பொன்வசந்தம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

அவர் புதன்கிழமை நள்ளிரவு தனது விலை உயர்ந்த காரில் மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்தார். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணை பகுதியில், சாலை நடுவே திடீரென லாரி ஒன்று திரும்பியது. இதனால் நிலைத்தடுமாறிய கெளதம் வாசுதேவ் மேனின் கார் லாரி மீது மோதியது. இதில் கெளதம் மேனனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் கெளதம் மேனனை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் அங்கு புறநோயாளியாக சிகிச்சைப் பெற்று திரும்பினார். கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து இயக்குநர் கெளதம் மேனன் ட்விட்டரில் கூறியதாவது

என் நலன் விரும்பிய, நலம்பெற வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி. வாழ்வைத் திருப்பிய நொடிகள் அவை. இப்போது நலமாக இருக்கிறேன். ஹெச்.சி.எல். நிறுவனத்தில் பணிபுரியும் கோபாலகிருஷ்ணன் செய்த உதவியால் மனிதாபிமானத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டேன். மீண்டும் படப்பிடிப்பு தொடங்க காத்திருக்கிறேன் என்று எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com