சுடச்சுட

  
  vishal

  ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிட முயற்சி, சங்க நிதியில் குளறுபடி உள்ளிட்ட காரணங்களுக்காக திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பதவியிலிருந்து விஷால் விலக வேண்டும் என சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
  கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணி பெரும்பான்மையாக வெற்றி பெற்று நிர்வாகத்தைக் கைப்பற்றியது. இதன் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் விஷால் தலைமையிலான நிர்வாகத்தினர் உள்ளிட்ட ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் சங்க நலனுக்கு எதிராக, ஆர். கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிட விஷால் முயற்சி எடுத்ததாக கூறி, தயாரிப்பாளர்கள் சேரன், டி.ராஜேந்தர், சுரேஷ் காமாட்சி, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து கேள்விகளை எழுப்பினர். அத்துடன் சங்க நிதி தவறாக கையாளப்பட்டு வருவதாகவும் விஷால் தலைமையிலான நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. 
  ராஜிநாமா செய்ய வலியுறுத்தல்: சங்க உறுப்பினர்கள் நலனுக்கான திட்டங்களில் கவனம் செலுத்தாமல், அரசியல் கட்சியை ஆரம்பிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ள விஷால் தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து கூட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.
  20 நிமிடங்களில் முடிந்த கூட்டம்: இதற்கு விஷால் தரப்பிலிருந்து உரிய விளக்கம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து விஷாலுக்கு எதிராக கோஷங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டதால், எவ்வித தீர்மானங்களும், விவாதங்களும் இன்றி பொதுக்குழு சுமார் 20 நிமிடங்களில் நிறைவடைந்தது. மேலும் தேதி குறிப்பிடப்படாமலும் ஒத்தி வைக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai