சுடச்சுட

  

  நடிகர், நடிகைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாரிப்பாளர் சங்கம் புதிய கட்டுப்பாடு!

  By எழில்  |   Published on : 16th December 2017 03:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dd_11

   

  தொலைக்காட்சி உரிமம் வழங்கப்படும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டும் நடிகர் நடிகைகள் பேட்டியளிக்கவேண்டும் என்று நடிகர் சங்கத்திடம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

  இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்கத்துக்குத் தயாரிப்பாளர் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

  நடிகர் சங்க உறுப்பினர்கள் நடிக்கும் திரைப்படங்கள் எந்தத் தொலைக்காட்சி சாடிலைட் உரிமைகளை வாங்குகிறார்களோ அந்தந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்கவேண்டும் என்றும் மற்ற தொலைக்காட்சிகளில் நேரலையோ அல்லது திரைப்படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலோ பங்கேற்க வேண்டாம் என்றும் இதனை டிசம்பர் மாதம் முதல் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் தமிழத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நடிகர் சங்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

  பொதுவாக ஒரு படம் வெளியாகும்போது எல்லாத் தொலைக்காட்சிகளிலும் அப்படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்பார்கள். இதன்மூலம் படத்துக்கு விளம்பரம் கிடைத்து படம் ஓடுவதற்கு உதவும் என்று நடிகர் நடிகைகளும் இயக்குநர்களும் எண்ணுகிறார்கள். ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தின் இந்தக் கோரிக்கையும் கட்டுப்பாடும் திரையுலகில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்று அறியப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கத்தின் இந்தக் கோரிக்கையை நடிகர் சங்கம் ஏற்றுக்கொண்டால் தொலைக்காட்சிகளுக்குப் பெரும் சிக்கல் ஏற்படும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai