சுடச்சுட

  

  மலேசிய நட்சத்திர கலை விழா: ஜன. 5, 6 தேதிகளில் படப்பிடிப்புகள் ரத்து

  By DIN  |   Published on : 17th December 2017 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cinema_roll1

  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில், மலேசியாவில் நடத்தப்படும் நட்சத்திர கலை விழாவையொட்டி, ஜனவரி மாதம் 5 மற்றும் 6 ஆகிய இரு தினங்களில், தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.
  இதுதொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:-
  தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் பிரமாண்டமான "நட்சத்திர விழா 2018' வரும் ஜனவரி 6-ஆம் தேதி மலேசியாவிலுள்ள புக்கட் ஜலீல் உள்அரங்கில் நடைபெறுகிறது. முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அன்று முழுவதும் நடைபெறுகின்றன. அதில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் அனைத்து நடிகர்- நடிகைகளும் கலந்து கொள்ள வசதியாக ஜனவரி 5 மற்றும் 6 தேதிகளில் படப்பிடிப்புகளுக்கு விடுமுறை அளிக்குமாறு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில், தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதற்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai