இந்தக் கதையில் ராமனும் நான்தான், ராவணனும் நான்தான்! விஜய் சேதுபதி!

இத்திரைப்படத்தில், விஜய் சேதுபதி பழங்குடி இனத்தலைவராகவும், கெளதம் கார்த்திக் கல்லூரி
இந்தக் கதையில் ராமனும் நான்தான், ராவணனும் நான்தான்! விஜய் சேதுபதி!

இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், ரமேஷ் திலக், நிஹாரிக்கா, விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம், 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு எட்டுவிதமான கெட்டப்புக்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்தப் படம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸாகிறது. ஆனால் பொங்கல் அன்று வெளிவருமா என்பது சந்தேகம்தான் என்றனர் படக்குழுவினர். கடந்த மாதம் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது.


'சீதையை தூக்கிட்டுப் போனாலும் கைபடாம வைச்சிருந்த ராவணனை அரக்கன்னு சொல்றோம். அதே சீதையை சந்தேகத் தீயில எரிச்ச ராமனைக் கடவுள்னு சொல்றோம். ராமன் கெட்டவனா, ராவணன் கெட்டவனா?' என்று ஒரு கேள்வியை விஜய் செதுபதி கேட்க, உடன் இருக்கும் இரண்டு பேர் ராமன் தான் கெட்டவன், இல்லை இல்லை ராவணன் தான் கெட்டவன் என்று சொல்ல சர்ச்சையாகிறது. உடனே விஜய் சேதுபதி தலையிட்டு இந்தக் கதையில் ராமனும் நான்தான், ராவணனும் நான்தான்' என்கிறார். இந்த வசனம் படத்துக்கான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் படம் பற்றி பேசுகையில் : இந்த ஸ்கிரிப்ட் எழுதி முடிச்சு ஒரு வருஷம் ஆச்சு. விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் வித்தியாசமானது. நல்லது கெட்டது ரெண்டும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. விஜய் சேதுபதி நல்லவரா கெட்டவரா என்பது போன்ற விவாத அடிப்படையில் இந்த டயலாக் அமைய வேண்டும் என்று யோசிச்சேன்.  இந்தப் பட டிஸ்கஷன் சமயத்தில் இது க்ளிக் ஆகியது. எல்லோருக்கும் எளிதாகப் புரியக் கூடிய ராமாயணம் பற்றிய டயலாக்கையே இதற்கு பயன்படுத்தினோம். 

இத்திரைப்படத்தில், விஜய் சேதுபதி பழங்குடி இனத்தலைவராகவும், கெளதம் கார்த்திக் கல்லூரி மாணவராகவும் நடித்துள்ளனர். இவர் இடத்துக்கு அவரும், அவர் இடத்துக்கு இவரும் சூழல் காரணமாக மாறி வந்துவிடுவார்கள். இதில் நேரும் கலாச்சார சிக்கல்கள் நகைச்சுவையாக கூறியுள்ளோம்.  இந்தப் படத்துல ஒரு புது விஷயம் ஹீரோயின் நிஹாரிகா சிரஞ்சீவி குடும்பத்திலேர்ந்து தமிழுக்கு முதல் முறையாக நடிக்க வந்திருக்காங்க. இன்னும் படம் பல சர்ப்ரைஸ்களைத் தரும்’ என்றார்

விஜய் சேதுபதி ட்ரைபலாக நடித்துள்ளார். உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர் குவண்ட்டின் டொரண்டனோவில் டிஜாங்கோ அன்செயின்ட் என்ற படத்தில் வரும் நாயகன் டிஜாங்கோ போலவே விஜய் சேதுபதி குதிரையில் அமர்ந்து வரும் காட்சியொன்று படத்தில் வருகிறது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com