சுடச்சுட

  

  விஸ்வரூபம் 2 படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் பரபரப்பாக ஈடுபடும் கமல்!

  By DIN  |   Published on : 22nd December 2017 12:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  viswa2

   

  விஸ்வரூபம் 2 படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கமல் தகவல் தெரிவித்துள்ளார்.

  விஸ்வரூபம் படத்துக்குப் பிறகு அதன் அடுத்தப் பாகமான விஸ்வரூபம் 2 படத்தைத் தொடங்கினார் கமல். ஆனால் அந்தப் படத்தின் பணிகள் முழுமையடையாததால் வேறு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் சிறிது இடைவெளிக்குப் பிறகு விஸ்வரூபம் 2 படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளார் கமல். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ஹிந்தி, தெலுங்குப் பதிப்புகளுக்கான டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டன. சில வாரங்களுக்கு முன்பு, கடைசிக்கட்டப் படப்பிடிப்பையும் நடத்தினார் கமல். சென்னையில் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி தரும் மையத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கமல், ஆண்ட்ரியா கலந்துகொண்டார்கள். 

  இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் கமல்.

  விஸ்வரூபம் 2 குறித்து வார இதழில் எழுதும் தொடரில் கமல் தெரிவித்ததாவது: விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிக்கட்ட சிஜி, சவுண்ட் வேலைக்காக அமெரிக்காவில் இருக்கிறேன். நாளொன்றுக்கு 15 மணி நேரத்தையும் தாண்டிய பரபர பணி. ஆனால், 20 மணிநேரம் ஒதுக்கினால்தான் முடிக்க முடியும் என்று கூடுதல் நேரம் கேட்கிறது தொழில்நுட்பம். படத்துக்குக் கிடைக்கப்போகும் பாராட்டுகளை நினைக்கும்போது பணிச்சோர்வு மறந்து உத்வேகம் கொள்கிறேன். ஏனெனில், பாராட்டு மட்டும்தான் எங்களுக்குத் திருப்தியளிக்கும் உச்சபட்ச ஊதியம் என்று கூறியுள்ளார்.

  ட்விட்டரிலும் இதுபற்றிய செய்தியை வெளியிட்டுள்ளார். விஸ்வரூபம் படத்தின் ஒலியமைப்பு அற்புதமாக அமைந்துள்ளது. இதைச் சாத்தியமாக்கிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. திரையில் தயாரிப்பாளர் பெயராக எனது சகோதரரின் பெயர் உள்ளது. அவர் இருந்திருந்தால் இந்தப் புகைப்படத்தை அனுப்பியிருப்பேன் என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai