சுடச்சுட

  

  ரஜினிகாந்த் தனது கட்சிக் கொடியை எப்போது அறிவிப்பார் தெரியுமா?

  By உமா  |   Published on : 31st December 2017 03:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rajini1

   

  சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில், நடிகர் ரஜினிகாந்த் இன்று ரசிகர்கள் மத்தியில் அரசியலில் இறங்கப் போவதாகவும், தனிக்கட்சி தொடங்குவேன் என்றும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ரஜினியின் அரசியல் வருகைக்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். ரஜினி இமயமலை சென்று தனது குருநாதரிடம் ஆசி பெற்றபின்னர், அதிகாரபூர்வமாகத் தமது கட்சி சின்னம் மற்றும் கொடியை வெளியிடுவார் என்கிறது ரஜினியின் நெருங்கிய வட்டாரம். அதுவரை பாபா முத்திரையே ரஜினியின் அறிவிக்கப்படாத சின்னமாக திகழும். ஒரே நாளில் எல்லா அறிவிப்புக்களையும் வெளியிடாமல் சிறிய இடைவேளைக்குப் பின், மக்கள், மீடியா பிற அரசியல் கட்சிகள் ஆகியோர்களின் எதிர்வினைகளைக் கணித்த பின் தமது அடுத்தகட்ட பாய்ச்சலை ரஜினி நிகழ்த்துவார். இது ரஜினியின் முதல் அரசியல் ஸ்ட்ராடிஜி என்று தெரிகிறது.

  கலைஞர் கருணாநிதி உதய சூரியனை சின்னத்தையும், ஜெயலலிதா இரட்டை இலையையும் கையில் காட்டுவது போது, நடிகர் ரஜினிகாந்த் பாபா முத்திரையை வெளிப்படையாக காண்பித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் அண்மையில் ரசிகர்களை சந்தித்த போது அந்த அரங்கத்தின் திரையில் காணப்பட்ட பெரிய வெள்ளை வண்ணப் பூவினைக் கட்சிக் கொடியாக அறிவிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. பாபா முத்திரை, வெள்ளைப் பூ ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றினை தனது கட்சியின் சின்னமாக்குவார் என்றும் கூறப்படுகிறது. 

  பொங்கல் தினத்தன்று தனது சின்னம் மற்றும் கட்சி குறித்த அறிவிப்பை ரஜினி வெளியிடலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனை பிரஸ் மீட் மூலம் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai