ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கனையாக மாறியது எப்படி?: கனா படப்பாடல் மேக்கிங் விடியோ வெளியீடு
By எழில் | Published on : 29th August 2018 05:45 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

தன் நெருங்கிய நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தைத் தயாரித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
கபாலி படத்தில் நெருப்புடா பாடல் மூலம் கவனம் பெற்ற அருண்ராஜா இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன், இசை - திபு நினன் தாமஸ். படத்தொகுப்பு - ஆண்டனி எல். ரூபன்.
இப்படப் பாடலின் லிரிக் விடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கனையாகப் பயிற்சி பெறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.