விஜய் சேதுபதி மாறவே இல்லை! இயக்குநர் பாலாஜி தரணீதரன் பேட்டி! (விடியோ)

முதல் படத்துக்கு ஆறு வருடம் கழித்து சீதக்காதி எடுத்திருக்கீங்க? இந்த கேப்ல சினிமா மாறியிருக்கிறதா? 
விஜய் சேதுபதி மாறவே இல்லை! இயக்குநர் பாலாஜி தரணீதரன் பேட்டி! (விடியோ)

சினிமா எக்ஸ்பிரஸ் 'ரிலீங் இன்’ பகுதிக்காக நிருபர் கோபிநாத் ராஜேந்திரன் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணீதரன். அதிலிருந்து சில துளிகள்:

முதல் படத்துக்கு ஆறு வருடம் கழித்து சீதக்காதி எடுத்திருக்கீங்க? இந்த கேப்ல சினிமா மாறியிருக்கிறதா? 

ஆறு வருட இடைவெளி இல்லை. இரண்டாவது படமா 'ஒரு பக்கக் கதை' எடுத்தேன். சில காரணமா அது ரிலீஸ் ஆகவில்லை. அந்தப் படத்துல பைனான்சியல் இஷ்யூ இருந்தது. படம் முடிஞ்சு சென்ஸார் பண்ணியாச்சு. ஜீ5 வாங்கியிருக்காங்க.....சினிமா கொஞ்சம் மாறி இருக்குன்னு சொல்லலாம்.

என்னோட முதல் படத்துக்கு ரொம்ப யோசிக்கவில்லை. கதையை அப்படியே எக்ஸிக்யூட் பண்ணினேன். அதுக்கு கிடைச்ச ரிசப்ஷனுக்குப் பிறகு, ரெண்டாவது படத்தை கவனமா ப்ளான் பண்ணேன். சில காரணங்களுக்காக அது வெளிவரவில்லை. சீதக்காதி என்னோட பெஸ்ட்டுக்கு ட்ரை பண்ணியிருக்கேன். வரவிருக்கும் படங்களை மேலும் கவனமா பண்ணுவேன்.

சீதக்காதி இந்த டைட்டில் காரணம் என்ன?

செத்தும் கொடுத்தார் சீதக்காதின்னு ஒரு பழமொழி உண்டு. கலை மற்றும் கலைஞனின் பயணம்தான் இந்தப் படத்தோட கதை. இந்தக் கதையின் ஐடியா ஐந்து ஆண்டுகளுக்கு முன் வந்தது. உடனே எடுக்க முடியலை. இந்த இடைவெளிக்குப் பிறகு கதையை கையில எடுத்தேன். ஆனா கதையில அதிக மாற்றங்கள் செய்யலை. 

விஜய் சேதுபதியின் பங்களிப்பு சீதக்காதியில் எப்படி இருந்தது?

2013-ல் கதை ரெடியானதும் நான் நடிக்கறேன்னு அவர் சொன்னார். ஆனால் எனக்கு யோசனையா இருந்தது. அவருக்கு அந்த வயதான ரோல் சரியாக வருமான்னு யோசித்தேன். படம் பண்ணலாம்னு முடிவு செஞ்சு காஸ்டிங் பண்றப்ப,  இந்த பட்ஜெட்டுக்கும் கதைக்கும் அவர் தான் சரியா இருப்பாருன்னு முடிவு செஞ்சேன். ப்ராஸ்தடிக் அவருக்கு பண்ணால் என்ன என்று யோசித்தேன். அவரும் உடனே சரியென்றார்.

இந்த ரோலுக்காக சிரமம்பட்டாரா?

மேக்கப் போட ஐந்து மணி நேரம் ஆனது. அதுக்கான பொறுமை தேவையாக இருந்தது. ரெண்டு நாளைக்கு பிறகு அவருக்கு செட் ஆகியிருச்சு. அந்த மேக்கப்பை கலைப்பதற்கு 1 1/2 மணி நேரம். 

விஜய் சேதுபதி உள்ளிட்டு ஸ்டேஜ் ஆர்டிஸ்ட்களுடன் வேலை செய்த அனுபவம் எப்படி இருந்தது?

ஸ்டேஜ் ஆர்டிஸ்ட் கூட வொர்க் பண்றது க்ரேட் எக்ஸ்பீரியன்ஸ். தங்களோட பெஸ்டுக்கு சீக்கிரம் பண்ணுவாங்க. நடிக்கறதுதான் அவங்களுக்கு சந்தோஷம்.
அந்த சந்தோஷம் நமக்கும் தொத்திக்கும். 

விஜய் சேதுபதி 25-வது படம் இல்லையா?

ப்ரீ புரொடக்‌ஷன் அப்ப அவர் எனக்கு கால் பண்ணினார். சீதக்காதியை 25 படமா அறிவிச்சிடலாமான்னு கேட்டுட்டு அப்படியே அறிவிச்சார்.

விஜய் சேதுபதியிடம் இந்த ஆறு வருடங்களில் வித்யாசங்கள் எதாவது இருக்கா?

விஜய் சேதுபதி அதே போலத்தான் இருக்கார். எல்லா வெற்றிக்குப் பின்னரும் அதே போலத்தான் உள்ளார். இன்னிக்கு இருக்கற பிஸில புரஃபொஷனலா அதிக தூரம் போயிட்டார்....ஒரு மனிதரா அவர் அப்படியே தான் இருக்கார். 

கோவிந்த் வசந்த் இசை பற்றியும் பேக் க்ரவுண்ட் ஸ்கோர் எப்படி இருந்தது?

கோவிந்த் வசந்த் எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர். அவர் போக வேண்டிய உயரம் இன்னும் நிறைய உள்ளது. ஒரு கன்டென்டை எலிவேட் பண்றார்.

வெப் சீரியல்கள் பற்றி உங்கள் பார்வை?

வெப் நல்ல ப்ளாட்ஃபார்ம். நிறைய எக்ஸ்ப்ளோர் பண்ணலாம். சினிமால கதைக்கு தேவையான சுதந்திரம் கொஞ்சம் கம்மிதான்..ரொம்ப ரெஸ்ட்ரிக்டட். ஆனால் creative freedom வெப் சீரியஸ்ல இருக்கு. நம்ம கதை மக்கள் பார்க்கறாங்கறது சந்தோஷமான விஷயம்தானே?

அடுத்து என்ன ப்ளான்?

ரெண்டு கதை யோசிச்சிட்டு இருக்கேன். எந்த படம்னு கொஞ்ச நாள்ல முடிவாகிடும்.

இந்த நேர்காணலின் காணொளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com