இந்தியாவில் ரூ. 230 கோடியைத் தாண்டியது பத்மாவத் பட வசூல்!

சஞ்சய் லீலா பஞ்சாலி, ரன்வீர் சிங், ஷாகித் கபூர், தீபிகா படுகோன் ஆகியோரின் திரையுலக வாழ்வில் அதிகம் வசூலித்த படம்...
இந்தியாவில் ரூ. 230 கோடியைத் தாண்டியது பத்மாவத் பட வசூல்!

பாலிவுட் இயக்குர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள 'பத்மாவத்' திரைப்படத்தில், ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியின் வரலாறு தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு தடைகளைக் கடந்து, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் அந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

சர்ச்சைக்குரிய 'பத்மாவத்' திரைப்படத்துக்கு எதிராக, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. குர்கான், ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பேருந்து, இருசக்கர வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இப்போராட்டங்களின் எதிரொலியாக, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் 'பத்மாவத்' படத்தை திரையிடமாட்டோம் என்று மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.

எனினும் சர்ச்சைகளால் மிகுந்த கவனத்துக்கு ஆளான பத்மாவத் படம் மகத்தான வசூலைக் கண்டுள்ளது. நேற்று வரை இந்தப் படம் இந்தியாவில் ரூ. 225 கோடி வசூலித்து சாதனை செய்துள்ளது. சில மாநிலங்களில் வெளியாகாவிட்டாலும் கடந்த வெள்ளியன்று ரூ. 10 கோடியும் சனிக்கிழமை ரூ. 16 கோடியும் ஞாயிறன்று ரூ. 20 கோடியும் திங்களன்று ரூ. 7 கோடியும் செவ்வாயன்று ரூ. 6 கோடியும் புதனன்று ரூ. 5.50 கோடியும் வசூலித்து ரூ. 230 கோடி வசூலை எட்டியுள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தமாக ரூ. 231 கோடி வசூலாகியுள்ளது. 

இந்தியாவில் ஷாருக் கான், தீபிகா படுகோன் நடித்த  சென்னை எக்ஸ்பிரஸ் படம் வசூலித்ததை விடவும் பத்மாவத் அதிகமாக வசூலித்துள்ளது. இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள சஞ்சய் லீலா பஞ்சாலி, ரன்வீர் சிங், ஷாகித் கபூர், தீபிகா படுகோன் ஆகியோரின் திரையுலக வாழ்வில் அதிகம் வசூலித்த படம் பத்மாவத் தான்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com