Enable Javscript for better performance
வெளியானது மணிரத்னத்தின் புதிய படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர்!- Dinamani

சுடச்சுட

    

    வெளியானது மணிரத்னத்தின் புதிய படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர்! 

    By DIN  |   Published on : 09th February 2018 06:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    manirathnam

     

    சென்னை: நடிகர்கள் விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி மற்றும் சிலம்பரசன் உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியாகியுள்ளது.

    மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது.

    "செக்கச்சிவந்த வானம்" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன் (STR), விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

    இப்படத்திற்கு  A.R.ரஹ்மான் இசையமைக்கிறார். பாடல்கள் அனைத்தையும் வைரமுத்து எழுதுகிறார். படத்தின் ஒளிப்பதிவை சந்தோஷ் சிவன் கவனிக்கிறார்.

    வரும் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai