சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாராட்டுக்களைப் பெற்றவர் யார்?

விக்ரம், தமன்னா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கிய 'ஸ்கெட்ச்' திரைப்படம் வெளிவந்த நாள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாராட்டுக்களைப் பெற்றவர் யார்?

விக்ரம், தமன்னா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கிய 'ஸ்கெட்ச்' திரைப்படம் வெளிவந்த நாள் முதல் திரை ஆர்வலர்களின் கவனிப்பைப் பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள் தங்களது பாராட்டுக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் அண்மையில் 'ஸ்கெட்ச்’ சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக சிறப்பு காட்சியாகத் திரையிடப்பட்டது.

இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவுடன் 'ஸ்கெட்ச்' திரைப்படத்தை முழுமையாக பார்த்த ரஜினி படக் குழுவினர்களை மனம் திறந்து பாராட்டினார். குறிப்பாக கடைசி முப்பது நிமிட காட்சிகள் மிகவும் அருமை என்றும் நல்ல கருத்துக்களுடன் கூடிய கிளைமாக்ஸ் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு நன்றி கூறி சீயான் விக்ரம் மற்றும் ஸ்கெட்ச் பட இயக்குநர் விஜய் சந்தர் தங்கள் டிவிட்டரில் பதிவு போட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com