Enable Javscript for better performance
திருமணத்திற்கு முன்பு பெண்கள் தங்கள் இஷ்டப்படி வாழலாம்! 'இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யா- Dinamani

சுடச்சுட

  

  திருமணத்திற்கு முன்பு பெண்கள் தங்கள் இஷ்டப்படி வாழலாம்! 'இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து!

  By ராக்கி  |   Published on : 15th May 2018 10:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  yashika_anand

   

  'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்தில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த் சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் கவர்ச்சியான உடைகள் அணியும் பழக்கமுடையவராம். அப்படி எடுக்கப்பட்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் இவர். சில புகைப்படங்களை வெளியிடும்போது அவர் தெரிவித்துள்ள கருத்துகளும் ஏடாகூடமாக இருக்கும்.

  அண்மையில் இவர் அளித்திருந்த பேட்டியில் திருமணத்துக்கு முன் பெண்கள் கன்னித்தன்மையை இழக்கலாம் என்ற  கருத்து பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமணத்துக்கு முன்னால் ஆண்களை போலவே, பெண்களும் தங்களது கன்னித்தன்மையை இழப்பதில் தவறு ஏதுமில்லை என்று கூறியிருக்கிறார் யாஷிகா.

  இந்தியா டுடே எடுத்த சர்வே ஒன்றில் நடிகை குஷ்பு பல ஆண்டுகளுக்கு முன்னால் கூறிய இதே கருத்து கடும் விமரிசனத்துக்கு உள்ளானது நினைவிருக்கலாம்.

  நடிகைகளின் புகைப்படங்களை ரசிக்கும் அதே சமயத்தில் அவர்களது இத்தகைய உளறல்களை புறம் தள்ளியே வருகின்றனர் நெட்டிசன்கள். இது போன்ற சென்சிட்டிவான விஷயங்கள் அந்தந்த நபர்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட விஷயம் சார்ந்தது. அதைப் பொதுமைப்படுத்தவோ பல்லாண்டு காலம் பின்பற்றப்படும் கலாச்சாரத்தின் மீது எதிர்கருத்து வைக்க தகுதியில்லாதவர்கள் பேசுவது கேலிக்குரியது என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

  மது, புகை மற்றும் பிற போதைப் பொருட்கள் ஏற்படுத்தும் சமூகச் சீரழிவுகளை விட மோசமான சீர்கேட்டை இதுபோன்ற ஒற்றைத் திரைப்படம் ஏற்படுத்தி விடும். இத்தகைய மலிவான, அருவருக்கத்தக்க ஆபாசப் படங்களை பார்ப்பதிலிருந்து இளைஞர்களும், மாணவர்களும், தமிழ் சமுதாயத்தின் பிற அங்கங்களும் விலகி இருக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல் தமிழகத்தில் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் இந்தத் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்’ என அண்மையில் நீண்டதொரு அறிக்கையின் முடிவாக பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  திரைப்படங்கள் சமூக சிக்கல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக, அவர்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். மக்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணித்து எடுக்கப்பட்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பல தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளதையும் மீறி இந்தப் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது திரை ரசனைக்குப் பிடித்த சாபம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai