இளையராஜாவின் பாடல்களைக் கச்சேரிகளில் பாட கட்டணம் எவ்வளவு?

இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் கச்சேரி செய்வதற்கு...
இளையராஜாவின் பாடல்களைக் கச்சேரிகளில் பாட கட்டணம் எவ்வளவு?

ஐபிஆர்எஸ்-க்கு பதிலாக இசைக் கலைஞர்கள் சங்கம், இந்த ராயல்டி தொகையை வசூலித்துக் கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பாடகர்கள், பாடகிகள் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் இதில் அடங்குவார்கள். யாரும் பாடுவதற்கு நான் இடைஞ்சல் செய்யவில்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். பணம் வாங்கிக் கொண்டுதான் நீங்களும் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள். என் பாடலை பாடுபவர்கள் பணம் வாங்குகிறார்கள். அதில் எனக்குப் பங்கு இல்லையா? பாடலே என்னுடையது என்கிற போது பங்கு எப்படி இல்லாமல் போகும். பங்கு என்பது சிறிய தொகைதான். 

அதைக் கூட பெயருக்குத்தான் கேட்கிறேன். நாளைய தலைமுறைக்கு இது சரியான நடவடிக்கையாக இருக்கும். முன்னோடி நடவடிக்கையாகவும் இருக்கும். அதில் அடியெடுத்து வைத்தவன் நான் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார் இளையராஜா. 

பாடல்களின் காப்புரிமையைக் காக்கும் பணியையும், நெறிப்படுத்தும் பணியையும் இசைக் கலைஞர்கள் சங்கத்துக்கு தந்து, அதில் வரும் தொகையை இசைக் கலைஞர்கள் பெறுவதும் இதுவே முதல் முறை. இந்த நிதி உறுப்பினர்களின் சேமநல நிதிக்கும், உறுப்பினர்களின் கருணைத் தொகைக்கும் மட்டுமே சென்றடையும். இளையராஜா இந்த பெரிய சேவையை அளித்ததில் இசைக் கலைஞர்கள் சங்கம் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது என்று இசைக் கலைஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இளையராஜாவின் விடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் பல்வேறு எதிர்மறையான கருத்துகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் தன்னுடைய பாடல்களைப் பாடுவதற்கு இளையராஜா கேட்கும் கட்டணம் எவ்வளவு என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக திரையிசைக் கலைஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதில் உள்ள கட்டண விவரங்கள்: 

இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் கச்சேரி செய்வதற்கு ஏ பிரிவினருக்கு ஓர் ஆண்டுக்கு ரூ. 20 லட்சமும் பி பிரிவினருக்கு ரூ. 15 லட்சமும் சி பிரிவினருக்கு ரூ. 10 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அறக்கட்டளை நிகழ்ச்சிகள், திருமணம், பிறந்தநாள் நிகழ்ச்சிகள், கோயில்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் கச்சேரி நடத்துவதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. ஏ.பி, சி பிரிவுகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபல பாடகர்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com