தமிழ் இசை ஆராய்ச்சிக்காக இணையத்தளம் தொடங்கினார் ஏ.ஆர். ரஹ்மான்!

கருணாமிர்தசாகரம் என்கிற பெயரில் தமிழிசை ஆராய்ச்சி குறித்த இணையத்தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்..
தமிழ் இசை ஆராய்ச்சிக்காக இணையத்தளம் தொடங்கினார் ஏ.ஆர். ரஹ்மான்!

ஆபிரகாம் பண்டிதர் (1859-1919) தமிழ் இசையின் வரலாற்றை முன்வைத்து கருணாமிர்தசாகரம் என்கிற நூலை 1917-ல் எழுதினார். 

இந்நிலையில் கருணாமிர்தசாகரம் என்கிற பெயரில் தமிழ் இசை ஆராய்ச்சி குறித்த இணையத்தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். அவருடைய ஏ.ஆர். ரஹ்மான் ஃபவுண்டேஷன் இதனை நிர்வகிக்கிறது. கவிஞர் குட்டி ரேவதி இந்த இணையத்தளத்தின் உருவாக்கத்தில் பணியாற்றியுள்ளார். 3000 ஆண்டு வரலாறு கொண்ட தமிழ் இசை குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் இந்த இணையத்தளம், நேற்று நடைபெற்ற சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொடங்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com