பேட்ட படத்தில் இணைந்த பிரபல இயக்குநர்: மதுரை பின்னணி காரணமா?

இக்கதைக் களம் மதுரை பின்னணியாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக அந்த 2-ஆவது லுக் போஸ்டரில் இருப்பது மதுரை மீனாட்சியம்மன் கோயில் எனவும் பரவலாகப் பேசப்படுகிறது. 
பேட்ட படத்தில் இணைந்த பிரபல இயக்குநர்: மதுரை பின்னணி காரணமா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் முதல்முறையாக ரஜினிகாந்துக்கு இப்படத்தில் இசையமைக்கிறார். இதில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர், மிகப்பெரிய மீசையுடன் தோன்றும் ரஜினியின் 2-ஆவது லுக் ஆகியவை ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுபோன்று பேட்ட படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதில் 2-ஆவது லுக் பின்னணியில் சூரிய உதயத்தின் போது கோயில் இருப்பது போன்று புகைப்படம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குநர் சசிகுமார் பேட்ட படத்தில் நடிக்கிறார். இதை சன் பிக்சர்ஸ் உறுதிசெய்தது. எனவே இக்கதைக் களம் மதுரை பின்னணியாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக அந்த 2-ஆவது லுக் போஸ்டரில் இருப்பது மதுரை மீனாட்சியம்மன் கோயில் எனவும் பரவலாகப் பேசப்படுகிறது. 

முன்னதாக, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற கேங்ஸ்டர் திரைப்படமான ஜிகர்தண்டா, மதுரையை பின்னணியாகக் கொண்ட திரைப்படமாக வெளியானது. அதுமட்டுமல்லாமல் விருது விழா ஒன்றில் பேசும் போது அசால்ட் சேது கதாப்பத்திரத்தை ரஜினிகாந்தை மனதில் வைத்து உருவாக்கியதாகவும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருந்தார். 

அதற்கு அந்த கதையை தன்னிடம் கூறியிருந்தால் தானே நடித்திருப்பேன் எனவும் ரஜினி பதிலளித்தது, தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாகி வரும் பேட்ட படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com