செக்கச் சிவந்த வானம்: ரஹ்மான் இசையமைத்துள்ள 2 பாடல்கள் வெளியீடு!
By எழில் | Published on : 05th September 2018 05:29 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் போன்றோர் நடிக்கிறார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். இது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது தயாரிப்பு.
இந்தப் படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 13 அன்று சீமராஜா-வும் செப்டம்பர் 20 அன்று சாமி 2-வும் செப்டம்பர் 27 அன்று என்னை நோக்கி பாயும் தோட்டாவும் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 28 அன்று செக்கச் சிவந்த வானம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இன்று இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்படுகின்றன. அதன் தொடக்கமாக 2 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.