சுடச்சுட

  
  Sri_reddy_0

   

  திரையுலகில் நடிகைகளுக்கு ஏற்படும் தொல்லைகளை வெளிஉலகுக்கு தெரியப்படுத்த போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி, தெலுங்கு பட உலகில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக தற்போது சென்னையில் குடியேறியுள்ளார். இவரை வைத்து 'ரெட்டி டைரி' என்ற பெயரில் சித்திரை செல்வன் படமொன்றை தயாரிக்கிறார். 'இத்திரைப்படம் என்னுடைய வாழ்க்கையை அடிப்படையாக கொண்டதல்ல. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை' என்கிறார் ஸ்ரீரெட்டி.

  **

  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகன், மேகா ஆகாஷ் ஆகியோர் பெயர் பரிசீலனையில் இருந்தாலும், இறுதியில் தற்போது விஜய்சேதுபதியுடன் "96' என்ற படத்தில் நடிக்கும் த்ரிஷாவுக்கு, ரஜினியுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் ரஜனியுடன் விஜய் சேதுபதியும் நடிப்பதால், இரண்டு நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷடமாக நினைக்கிறார் த்ரிஷா.

  **

  அண்மையில் சிங்கப்பூரில் போர்டிங் பள்ளியில் படித்து வரும் தன் மகள், தன்னை பார்க்க வந்தபோது, பத்திரிகையாளர்கள் கண்களில் படாமல் திரும்பவும் சிங்கப்பூர் சென்று மகளை விட்டுவிட்டு வந்துள்ள நடிகை கஜோல். தன்னுடைய மகன் வெளி உலகுக்கு தெரிந்தவனாக இருந்தாலும், மகளை மட்டும் அடையாளம் காட்டாமல் பாதுகாத்து வரும் கஜோல் இடையில் தமிழில் 'விஐபி -2' படத்தில் நடித்த பின், இந்தியில் 'தில்வாலே' படத்திற்கு பின் மூன்றாண்டுகள் கழித்து தன் கணவர், அஜய் தேவ்கன் தயாரிக்கும் 'ஹெலிகாப்டர் ஈ.வா' என்ற படத்தில் நடித்துள்ளார். இவருடன் நீண்ட இடைவெளிக்குப்பின் அமிதாப்பச்சன் முக்கிய காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

  **

  'குயின்' இந்திப் படத்தை முதலில் பார்த்தபோது இதில் என்ன சிறப்பு இருக்கிறதென்று நினைத்தேன். ஒவ்வொரு திரைப்படத்தை பார்க்கும்போதும், புத்தகத்தை படிக்கும்போதும் அதில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் என்னை நிறுத்தி சற்று மிகையாகவே கற்பனை செய்து பார்ப்பேன். ஒரிஜினல் "குயின்' படத்தை பார்த்தபோது, அதில் எனக்கு தகுதியான பாத்திரம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இருப்பினும் குயின் படம் என்னை வெகுவாக கவர்ந்தது. ஆனால் திடீரென அதன் தமிழ்ப் பதிப்பான "பாரிஸ் பாரிஸ்' படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது, பலரும் நடிக்க எதிர்பார்த்த அந்தப் படத்தில் நடிப்பதை அதிர்ஷ்டமாக கருதி உடனே ஒப்புக் கொண்டேன்'' என்று கூறியிருக்கிறார் காஜல் அகர்வால்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai