ட்விட்டரில் பொங்கினால் மட்டும் போதாது: ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்ட விதம் குறித்து கமல் ஆவேசம்!

நான் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியிருக்க வேண்டும். ஆனால் இங்கு என்னை யார் கேட்கிறார்கள்?...
ட்விட்டரில் பொங்கினால் மட்டும் போதாது: ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்ட விதம் குறித்து கமல் ஆவேசம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சென்றாயன் வெளியேறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த வாரம் வெளியேறுபவர்களுக்கான பரிந்துரைப் பட்டியலில் நடிகை ஐஸ்வர்யா, மும்தாஜ், ஜனனி, விஜயலட்சுமி, சென்றாயன் ஆகியோர் இடம்பெற்றார்கள்.

கடந்த வார டாஸ்க் ஒன்றில் சென்றாயனிடம் ஒரு பொய் சொல்லி காரியத்தை நிறைவேற்றியதால் ஐஸ்வர்யா மீது பிக் பாஸ் போட்டியாளர்களும் ரசிகர்களும் கோபத்தில் இருந்தார்கள். இதனால் அவர்தான் மக்களிடம் குறைவாக வாக்குகள் பெற்று வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. சமூகவலைத்தளங்களிலும் ஐஸ்வர்யாவுக்கு எதிராகப் பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். ஏராளமான மீம்கள் வெளியிடப்பட்டன.

ஆனால் எதிர்பாராதவிதமாக ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டார். அதிலும் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றவர்களில் அவர்தான் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். இதனால் சனி, ஞாயிறுகளில் நிகழ்ச்சியை நடத்திய கமல் மிகவும் ஏமாற்றதுடனும் கோபத்துடனும் ரசிகர்களிடம் தனது ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது:

ட்விட்டரில் விமரிசனம் செய்தால் மட்டும் போதாது. யாரை வெளியேற்ற நினைக்கிறீர்களோ அவர்களுக்கு எதிராக வாக்களிக்கவும் வேண்டும். ட்விட்டரில் பொங்கி, விமரிசனம் செய்தால் மட்டும் ஒருவரை வெளியேற்றிவிடமுடியாது. அதை வாக்குகளாகவும் மாற்றவேண்டும். சென்றாயனுக்கு ஆதரவாக யாரும் வாக்களிக்காததால் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் குறைந்த வாக்கு வித்தியாசமே உள்ளன. ஐஸ்வர்யா சொன்ன பொய்க்கு நியாயமாக நான் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியிருக்க வேண்டும். ஆனால் இங்கு என்னை யார் கேட்கிறார்கள்? உங்களையல்லவா கேட்கிறார்கள் என்று ஆவேசமாகப் பேசினார். பிறகு அநீதிக்கு எதிராக நான் குரல் கொடுப்பேன். அடுத்த வாரம் வெளியேறுபவர்களுக்கான பரிந்துரைப் பட்டியலில் ஐஸ்வர்யா நிச்சயம் இடம்பெறவேண்டும் என பிக் பாஸுக்குக் கோரிக்கை வைக்கிறேன். பார்க்கலாம் அவர் இதை நிறைவேற்றுகிறாரா என என்று கூறி நிகழ்ச்சியை முடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com