சைமா விருதுகள்: ஐந்து பிரிவுகளில் வென்ற மெர்சல் படம்!

இந்த விழாவில் மெர்சல் படத்துக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த இயக்குநர் விருது அட்லிக்கும் சிறந்த வில்லன் விருது எஸ்.ஜே. சூர்யாவுக்கும் சிறந்த இசையமைப்பாளர் விருது...
சைமா விருதுகள்: ஐந்து பிரிவுகளில் வென்ற மெர்சல் படம்!

தென்னிந்தியத் திரைப்பட சர்வதேச விருதுகள் என்கிற சைமா விருது வழங்கும் நிகழ்ச்சி துபையில் நடைபெற்றது.

இந்த விழாவில் மெர்சல் படத்துக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த இயக்குநர் விருது அட்லிக்கும் சிறந்த வில்லன் விருது எஸ்.ஜே. சூர்யாவுக்கும் சிறந்த இசையமைப்பாளர் விருது ஏ.ஆர். ரஹ்மானுக்கும் சிறந்த பாடலாசிரியர் விருது விவேக்குக்கும் சிறந்த பாடகர் விருது சித் ஸ்ரீராமுக்கும் மெர்சல் படத்துக்காக வழங்கப்பட்டுள்ளன. 

சிறந்த படம் - விக்ரம் வேதா
சிறந்த இயக்குநர் - அட்லி (மெர்சல்)
சிறந்த நடிகர் - சிவகார்த்திகேயன் (வேலைக்காரன்)
சிறந்த நடிகர் (விமரிசகர்கள் பரிந்துரை) - மாதவன் (விக்ரம் வேதா)
சிறந்த நடிகை - நயன்தாரா (அறம்)
சிறந்த நடிகை (விமரிசகர்கள் பரிந்துரை) - அதிதி பாலன் (அருவி)
சிறந்த துணை நடிகர் - எம்.எஸ். பாஸ்கர் ( 8 தோட்டாக்கள்)
சிறந்த துணை நடிகை - ஷிவடா (அதே கண்கள்)
சிறந்த வில்லன் - எஸ். ஜே. சூர்யா (மெர்சல், ஸ்பைடர்)
சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர். ரஹ்மான் (மெர்சல்)
சிறந்த பாடலாசிரியர் - விவேக் (மெர்சல்)
சிறந்த பாடகர் - சித் ஸ்ரீராம் ( மெர்சல்)
சிறந்த பாடகி - லக்‌ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் (போகன்)
சிறந்த புதுமுக நடிகர் - வசந்த் ரவி (தரமணி)
சிறந்த புதுமுக நடிகை - அதிதி ராவ் ஹைதரி (காற்று வெளியிடை)
சிறந்த அறிமுக இயக்குநர் - அருண் பிரபு புருஷோத்தமன் (அருவி)
சிறந்த நகைச்சுவை நடிகர் - சூரி (சங்கிலி புங்கிலி கதவ தொற)
சிறந்த ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன் (காற்று வெளியிடை)
வாழ்நாள் சாதனையாளர் விருது - பாடகி பி. சுசீலா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com