சுடச்சுட

  

  மணி ரத்னம் படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன்!

  By எழில்  |   Published on : 12th April 2019 03:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mani_ratnam111xx

   

  மணி ரத்னம் தயாரிக்கும் வானம் கொட்டட்டும் என்கிற படத்தில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடிக்கிறார்கள். தயாரிப்பதுடன் இந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதியுள்ளார் மணி ரத்னம். 

  2017-ல் வெளியான கவன், பா பாண்டி படங்களுக்குப் பிறகு தமிழில் மடோனா கதாநாயகியாக நடிக்கும் இரண்டு படங்களில் இதுவும் ஒன்று. சசிகுமார் நடிக்கும் கொம்பு வைச்ச சிங்கமடா படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்கிறார்.

  விக்ரம் பிரபுவின் சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். 20 வருடங்களுக்குப் பிறகு கணவன், மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் சரத் குமாரும் ராதிகாவும். இசை - கோவிந்த் வசந்தா. 

  படைவீரன் படத்தை இயக்கிய தன சேகரன் இப்படத்தை இயக்குகிறார். மணி ரத்னத்திடம் உதவி இயக்குநராக இவர் பணியாற்றியுள்ளார். ஜூலை முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai