சுடச்சுட

  
  indhuja_new11xx

   

  மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது.

  நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. 2019 தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

  இந்நிலையில் இந்தப் படத்தில் தமிழ்ப் பெண் இந்துஜாவும் இணைந்துள்ளார். கடைசியாக மெர்குரி, பூமராங் படங்களில் இந்துஜா, இந்தப் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடிக்கவுள்ளார். சென்னையின் புறநகர்ப் பகுதியில் கால்பந்து மைதானம் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

  TAGS
  Indhuja
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai