சுடச்சுட

  

  வெள்ளைப்பூக்கள் கிளைமாக்ஸை சொல்லி விட வேண்டாம்: விவேக் கோரிக்கை!

  By எழில்  |   Published on : 13th April 2019 03:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vellai_pookal_vivek12

   

  விவேக் கதாநாயகனாக நடித்துள்ள வெள்ளைப்பூக்கள் படம், வரும் 19-ம் தேதி வெளிவரவுள்ளது.

  அமெரிக்காவில் கதை நடைபெறுவதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இடம்பெற்றுள்ளார்கள். விவேக், சார்லி, பூஜா தேவரியா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இயக்கம் - விவேக் இளங்கோவன்.

  இந்தப் படம் குறித்து விவேக் பேட்டியளித்ததாவது: 

  முதலில் இதுபோன்ற சீரியஸ் படத்தில் நடிக்க மிகவும் யோசித்தேன். மேலும் படக்குழுவினர்கள் அனைவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். ஆனால் கதை பிடித்திருந்தது. அமெரிக்கா சென்றபிறகு என்னை நன்குக் கவனித்துக்கொண்டார்கள். 

  இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் போன்று வேறு எந்தப் படத்திலும் நான் பார்த்ததில்லை. கடைசி சில நிமிடங்கள் அதிர்ச்சி ஏற்படுத்தும். எனவே தான் செய்தியாளர்களிடம், இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை வெளிப்படுத்தி விட வேண்டாம் எனக் கோரிக்கை வைத்தேன். எல்லாமே ஃபர்ஸ்ட் ஷோ வரைக்கும் தானே என்று கூறியுள்ளார்.

   

  TAGS
  Vivekh
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai