சுடச்சுட

  

  பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்தின் தடைக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

  By எழில்  |   Published on : 15th April 2019 12:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pm_modi711xx

   

  ஹிந்தி இயக்குநர் ஓமுங்க் குமார் இயக்கிய பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்தை சுரேஷ் ஓபராய் மற்றும் சந்தீப் சிங் உள்ளிட்டோர் தயாரித்தனர். இந்தத் திரைப்படத்தில் நடிகர் விவேக் ஓபராய், பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  பிரதமர் நரேந்திர மோடியின் இளமைக் காலம் தொடங்கி, அவர் அரசியலில் தடம் பதித்தது, பிரதமராக பதவி வகித்தது வரையிலான வாழ்க்கை வரலாறு குறித்து உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், 23 மொழிகளில் நாடு முழுவதும்  கடந்த 11-ஆம் தேதி வெளியாக இருந்தது. மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த திரைப்படத்தை வெளியிட்டால், அது மக்களை திசைதிருப்பும் செயல் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் குற்றம்சாட்டியதுடன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன.

  அதையடுத்து, தேர்தல் முடியும் வரை இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தடை விதித்தது. இந்த தடை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வரும் 15-ஆம் தேதி விசாரிப்பதாக கூறினர். 

  பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் பிறப்பித்த தடை உத்தரவுக்கு எதிரான மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, வரும் வெள்ளிக்கிழமைக்குள் பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்தைப் பார்வையிட்டு, படத்தை வெளியிடலாமா என்கிற முடிவை அறிக்கையாக சீலிட்ட உறையில் வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 22 அன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai