சுடச்சுட

  
  theatre8171

   

  மக்களவைப் பொதுத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 18) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தியா முழுக்க ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

  இந்நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால் தமிழ்நாட்டிலுள்ள திரையரங்குகளில் காலை மற்றும் மதியக் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில், இன்று இரவுக்காட்சி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று அனைத்துக் காட்சிகளையும் ரத்து செய்யவேண்டும் என திரையரங்குகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai