
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கிய படம் 96. தமிழில் பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தப் படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது.
கன்னடத்தில் விஜய் சேதுபதி வேடத்தில் கணேஷும் த்ரிஷா வேடத்தில் பாவனாவும் நடித்துள்ளார்கள். பள்ளி மாணவர்களாக நடித்த ஆதித்யா பாஸ்கர், கெளரி வேடங்களில் ஹேமந்த், சமிக்ஷா நடித்துள்ளார்கள். 99 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்கம் - ப்ரீதம் குப்பி. கடந்த டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கி தற்போது முழுப்படப்பிடிப்பும் நிறைவுபெற்றுள்ளது. இந்தப் படத்துக்காகக் கூடுதலாக 4 கிலோ எடையை அதிகப்படுத்தியதாக கணேஷ் கூறியுள்ளார். இப்படத்துக்கு இசையமைத்துள்ள அர்ஜுன் ஜன்யாவுக்கு இது 100-வது படம்.
99 படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...