சுடச்சுட

  

  ஓட்டைப் போடாதீர்கள் ஓட்டைப் போடாதீர்கள் நடிகர் பார்த்திபனின் அசத்தல் ட்விட்!

  By DIN  |   Published on : 17th April 2019 01:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  parthiban

   

  தேர்தல் 2019! நாட்டின் முக்கியமான நிகழ்வான இதற்கு சமூக வலைத்தளங்களில் அரசியல் குறித்த பரபரப்பான விவாதங்கள், பகிர்வுகளை சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை பதிவிட்டு வரும் நிலையில், சிலரின் ட்விட்டுகள் ரசிக்கும்படியாக இருப்பது உண்மை. அதிலொன்று பார்திபனின் அண்மை சுட்டுரைகள். சொல் விளையாட்டில் ஒரு கோரிக்கை விடுத்துள்ளது ரசிக்கத் தக்கதாக அமைந்துள்ளது.

  மாம்பழமோ? மாபெரும் பழமோ?
  பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கு,,,,
  தேர்தல்= தேத்துதல் (பணம்)
  வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள் அதுகூட
  திமிங்கல வேட்டைக்கே.
  காசு வாங்காமல் ஓட்டு போடுவோம்-மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு!

  **

  ஓட்டைப்  போடாதீர்கள்
  ஓட்டைப்  போடாதீர்கள்
  வல்லரசாகப் போகும்
  இந்தியாவின் கூகுள்
  வரைபடத்தில்
  ஓட்டைப்  போடாதீர்கள்
  தேர்தல் வந்துடுச்சி
  துட்டுக்கு ஓட்டைப்போட்டு
  நம் பிள்ளைகளின்
  ஆரோக்கிய வாழ்வில்
  (Scan report-டில்)
  ஓட்டைப்  போடாதீர்கள்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai