சுடச்சுட

  

  நயன்தாரா கோரிக்கை ஏற்பு: நடிகர் சங்கம் அமைக்கவுள்ள மீ டூ ஒருங்கிணைப்புக் குழு!

  By எழில்  |   Published on : 22nd April 2019 04:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vishal2

   

  அண்​மைகால​மாகச் சமூகவலைத்​த​ளங்​க​ளில் மீ டூ எனும் தலைப்​பில் பெண்​கள் தங்​க​ளுக்கு நேர்ந்த பாலி​யல் துன்​பு​றுத்​தல்​க​ளை​யும், கொடு​மை​க​ளை​யும் பகிர்ந்து வரு​வது பர​வ​லாகக் கவ​னத்​தைப் பெற்று வரு​கி​றது. குறிப்​பாக, சில முக்கிய பிர​மு​கர்​க​ளுக்கு எதி​ராக முன்​வைக்​கப்​ப​டும் குற்​றச்​சாட்​டு​க​ளும் பெரும் பர​ப​ரப்பை ஏற்​ப​டுத்தி வரு​கின்​றன.

  சமீபத்தில், தன்னைப் பற்றிய ராதாரவியின் அநாகரிகமான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பிரபல நடிகை நயன்தாரா, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஐசிசி அமைப்பை உருவாக்குவீர்களா? அப்படி உருவாக்கி, விசாகா வழிகாட்டுதலின்படி விசாரணைக் குழு அமைப்பீர்களா என நடிகர் சங்கத்திடம் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். 

  இந்நிலையில் நடிகர் சங்கர் சார்பில் மீ டூ ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படவுள்ளது. இதன் தலைவராக நாசரும் அக்குழுவில் நடிகர் சங்க உறுப்பினர்களான விஷால், கார்த்தி, பூச்சி முருகன், குஷ்பு, ரோஹிணி, சுஹாசினி போன்றோரும் இடம்பெறவுள்ளார்கள். மற்றும் சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என 9 பேர் கொண்ட குழுவாக மீ டூ ஒருங்கிணைப்புக் குழு அமையவுள்ளது. திரையுலகில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள், இந்தக் குழுவிடம் முறையிடலாம். அதன்பிறகு இக்குழுவினர் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். இந்தக் குழு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai