என் ஆடையைக் குறிப்பிட்டு கிண்டல் செய்பவர்களைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை

அப்படி ஒரு பின் தொடர்தலில் கிடைத்தது தான் ஜான்வி கபூர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படம். அந்தப் புகைப்படத்தில் ஜான்வி, முன்னரே அணிந்த ஆடையொன்றை மீண்டும் அணிந்து விட்டாராம்.
என் ஆடையைக் குறிப்பிட்டு கிண்டல் செய்பவர்களைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை

‘எனது உடை என்பது என் விருப்பம் மற்றும் வசதி சார்ந்தது. அதையெல்லாம் விமர்சித்துக் கொண்டிருந்தால், அவர்களை நான் ஒரு பொருட்டாகக் கருதப்போவதில்லை’

- இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டது யார் தெரியுமா?

வேறு யார்? மறைந்த  நடிகை  ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தான்.

ஜான்வி சொல்வதில் நியாயம் இல்லாமலில்லை. சினிமா நடிகைகள் என்றால் அவர்கள் செல்லுமிடமெல்லாம் பின் தொடர்ந்தே ஆக வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை. ஆனால், இந்த மும்பை புகைப்படக்காரர்கள் இருக்கிறார்களே! அவர்களுக்கு எந்த நடிகையைப் பொதுவெளியில் கண்டாலும் சரி உடனே புகைப்படமெடுத்தே ஆக வேண்டும், இல்லா விட்டால் தலை வெடித்து விடும். அவர்கள் ஹீரோ, ஹீரோயின்களை மட்டுமல்ல, அவர்களது குழந்தைகளையும், தாதிகளையும், வீட்டு வேலைக்காரர்களையும் கூட விட்டு வைப்பதில்லை. அவர்களைக் குடைந்தால் ஏதேனும் சர்ச்சையான செய்தி கிடைத்து விடாதா! என்ற நப்பாசையில் சதா பின் தொடர்வார்கள்.

அப்படி ஒரு பின் தொடர்தலில் கிடைத்தது தான் ஜான்வி கபூர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படம். அந்தப் புகைப்படத்தில் ஜான்வி, முன்னரே அணிந்த ஆடையொன்றை மீண்டும் அணிந்து விட்டாராம். உடனே அந்தப் புகைப்படத்தை இணைய ஊடகங்களில் பதிவேற்றி, ஜான்வி கபூரிடம் பணமில்லை போல, அதனால் தான் அணிந்து ஆடையே மீண்டும், மீண்டும் அணிந்து கொண்டிருக்கிறார் என்று 4 வரிச் செய்தியாக்கி விட்டார்கள். இதெல்லாம் ஒரு செய்தியா? இது தேவையா? என்று காய்கிறார் ஜான்வி. பிறகென்ன; நான் என் அம்மா சொன்னதை அப்படியே பின்பற்றுகிறவள், நான் நடிக்க வேண்டும் என்று திரையுலகில் நுழையும் போது என் அம்மா என்னிடம் சொன்னது;

‘மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யும் போது, நடிப்பு ஒன்றும் கஷ்டமான காரியமில்லை. எந்த ஒரு கதாபாத்திரத்தையும் உணர்ந்து உள்வாங்கி நடித்தாலே போதும், நடிப்பு எளிமையாகக் கை வரும். தேவையில்லாத தலைக்கனம் அவசியமில்லை. மிக அமைதியாக உன்னைச் சுற்றியுள்ள விஷயங்களை அவதானித்து நடிப்பில் முழுக் கவனம் செலுத்து அதுவே போதும்’ என்றார் என் அம்மா. அதைத்தான் நான் அவர் இல்லாத இந்த நாட்களிலும் பின்பற்றி வருகிறேன். மற்றபடி நான் ஜிம்முக்குச் செல்லும் போதும் என்னை யாராவது பார்ப்பார்கள்? என் ஆடை பற்றி யோசிப்பார்கள் என்றெல்லாம் யோசித்து என்னை நானே சிரமப் படுத்திக் கொள்ள முடியாது. அதனால், என் ஆடையைக் குறிப்பிட்டு கிண்டல் செய்பவர்களைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை.

- என்கிறார் ஜான்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com