கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவி சஹானாவின் கல்விச் செலவை ஏற்றார் நடிகர் சிவகார்த்திகேயன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவி சஹானாவின் கல்விச் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக நடிகர் சிவகார்த்தியேன் அறிவித்துள்ளார்...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவி சஹானாவின் கல்விச் செலவை ஏற்றார் நடிகர் சிவகார்த்திகேயன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவி சஹானாவின் கல்விச் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக நடிகர் சிவகார்த்தியேன் அறிவித்துள்ளார். 

கடந்த வருடம் ஏற்பட்ட கஜா புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்தன. பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்தன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்து போயின. 

தஞ்சாவூர் பூக்கொல்லைப் பகுதியைச் சேர்ந்த சஹானா, +2 தேர்வில் 600-க்கு 524 மதிப்பெண்கள் எடுத்தார். அரசுப்பள்ளி ஆசிரியரான செல்வம், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியதாவது: மின்சாரமில்லாத, கஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டு மன உறுதியோடு படித்து, நடந்து முடிந்த ப்ளஸ் டூ தேர்வில் 600-க்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார், தஞ்சாவூர் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மாணவி சஹானா என்று ஃபேஸ்புக்கில் பதிவொன்றை எழுதினார். இந்நிலையில் கத்துக்குட்டி பட இயக்குநர் இரா. சரவணன், ட்விட்டரில் எழுதியதாவது: கஜா பாதிப்பைக் கடந்து +2வில் 600-க்கு 524 பெற்ற மாணவி சஹானா மருத்துவம் படிக்க விரும்புகிறார். அவர் குடும்பத்தினரிடம் பேசியபோது பண உதவி அவசியம் எனப் புரிகிறது. உதவுங்கள் என்று தொலைப்பேசி எண்ணைப் பகிர்ந்தார். வங்கிக்கணக்கு விவரங்களையும் வெளியிட்டார். 

இந்நிலையில் இரா. சரவணனைத் தொடர்பு கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், சஹானாவின் முழு கல்விச் செலவையும் ஏற்பதாகக் கூறியிருக்கிறார். இதுகுறித்து இரா. சரவணன் வெளியிட்டுள்ள ட்வீட்: பதிவிட்ட சில நிமிடங்களிலேயே சஹானாவின் முழுக் கல்விச் செலவையும் ஏற்பதாகச் சொன்னார் சிவகார்த்திகேயன். விவசாயி நெல் ஜெயராமன் மகனின் கல்விச் செலவை ஏற்றது போலவே, சஹானாவின் கூலி விவசாயக் குடும்பத்திலும் விளக்கேற்றி வைக்கிறார் சிவகார்த்திகேயன். உதவும் உள்ளமே இறைவன் வாழும் இல்லம். கோடி நன்றிகள் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com