சுடச்சுட

  

  புதனன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறாது: சிறப்பு அதிகாரி சேகர் அறிவிப்பு 

  By DIN  |   Published on : 30th April 2019 08:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vishal-arrest-7

   

  சென்னை: புதனன்று நடைபெறுவதாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறாது என்று தமிழக அரசால் நியமிக்கப்பட்ட  சிறப்பு அதிகாரி சேகர் தெரிவித்துள்ளார்.

  நடிகர் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் கூறப்பட்டது. இதையடுத்து சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

  இந்த நியமத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்  தொடர்ந்தார்.

  இந்நிலையில் புதனன்று நடைபெறுவதாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறாது என்று தமிழக அரசால் நியமிக்கப்பட்ட  சிறப்பு அதிகாரி சேகர் தெரிவித்துள்ளார்.

  தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகிகளால் புதனன்று நடைபெறுவதாக திட்டமிடப்பட்ட பொதுக்குழு கூட்டமானது நடைபெற வாய்ப்பில்லை என்பது தொடர்பான  அறிவிப்பு தயாரிப்பாளர் சங்க அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai