இந்தியன் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் நடிகை ப்ரியா பவானி சங்கர் 

இந்தியன் 2 படத்தில் தானும் சித்தார்த்தும் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் நடிகை ப்ரியா பவானி சங்கர்.
இந்தியன் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் நடிகை ப்ரியா பவானி சங்கர் 

இந்தியன் 2 படத்தில் தானும் சித்தார்த்தும் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் பெரிய வெற்றியடைந்தது. இந்நிலையில் இப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. கமல், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், வித்யுத் ஜமால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி சங்கர் போன்றோர் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்கள். இசை - அனிருத்.

இந்நிலையில், இப்படத்தில் நடிப்பது குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ப்ரியா பவானி சங்கர். கமல் சார் மற்றும் சித்தார்த், காஜல் அகர்வால் ஆகியோருடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடிக்கிறேன் என்று இன்ஸ்டகிராம் தளத்தில் தன்னுடைய மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து இந்தியன் 2 படத்தில் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com