ஆறு நாள்களில் ரூ. 25 கோடி வசூல்: அசத்தும் கோமாளி!

கடந்த ஆறு நாள்களாக நேர்கொண்ட பார்வை படத்தை விடவும் அதிக வசூலைக் கண்டுள்ளது கோமாளி படம்...
ஆறு நாள்களில் ரூ. 25 கோடி வசூல்: அசத்தும் கோமாளி!

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோமாளி. ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சியால் படத்தின் டிரெய்லர் அதிகக் கவனத்துக்கு ஆளானது. இந்நிலையில் கோமாளி படத்துக்கு இதுவரை நல்ல வசூல் கிடைத்துள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள், நிர்வாகிகள் பலரும், வேறெந்த ஜெயம் ரவி படமும் ஆரம்ப நாள்களில் இந்தளவுக்கு வசூலித்ததில்லை, காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாகச் செல்கின்றன என்று சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதனால் டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி என ஹாட்ரிக் வெற்றிகளை ஜெயம் ரவி அடைந்துள்ளார் என அவருக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. 

தமிழ்நாட்டில் கோமாளி படத்துக்கு முதல் ஆறு நாள்களில் கிட்டத்தட்ட ரூ. 25 கோடி வசூல் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இன்னும் சொல்லப்போனால் கடந்த ஆறு நாள்களாக நேர்கொண்ட பார்வை படத்தை விடவும் அதிக வசூலைக் கண்டுள்ளது கோமாளி படம். கோமாளியை விடவும் ஒருவாரத்துக்கு முன்பே நேர்கொண்ட பார்வை படம் வெளியானதால் அதற்கான வரவேற்பு தற்போது குறைந்துள்ளது. இதனால் கோமாளி படம் அதிகமாகப் பலனடைந்துள்ளது. இதனால் கடந்த ஆறு நாள்களாக கோமாளி படத்துக்கு சென்னைத் திரையரங்கு உரிமையாளர்கள் முன்னுரிமை தருகிறார்கள். சென்னையில் பெரும்பாலான மல்டிபிளெக்ஸ்களில் உள்ள பெரிய திரையரங்குகளில் இதுவரை ஓடிக்கொண்டிருந்த நேர்கொண்ட பார்வை படம் சிறிய திரையரங்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்தப் பெரிய திரையரங்குகளில் கோமாளி படம் தற்போது திரையிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வெளியான நேர்கொண்ட பார்வை படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற நிலையில் அதற்கு அடுத்த வாரம் வெளியான கோமாளி படமும் ஹிட் ஆனதால் தமிழ்நாட்டுத் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள். 

ஆகஸ்ட் 30 அன்று பிரபாஸ் நடித்த சாஹோ படம் வெளியாகிறது. அதுவரை கோமாளி படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com