சுடச்சுட

  

  உலகத் தரத்தில் அஜித் உருவாக்கவிருக்கும் விளையாட்டு அகாதெமி!

  By ஷக்தி  |   Published on : 25th August 2019 01:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kutraleeswaran

   

  அஜித் நடிப்பில் அண்மையில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை சூப்பர் ஹிட்டாகி அவர் ரசிகர்களை மட்டுமல்லாமல் விமர்சகர்களையும் திருப்திப்படுத்தியது. அஜித் ஒரு படத்தில் நடித்த பின்னர் அதன் வெற்றி தோல்விகளில் ஈடுபாடு கொள்வதில்லை. தனது அடுத்த பட வேலைகளில் ஆழந்துவிடுவார். தல 60 என்று தற்போது அழைக்கப்படும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்குகிறார்.

  இந்நிலையில், இளம் வயதில் நீச்சலில் சாதனை புரிந்த குற்றாலீஸ்வரனை தனது வீட்டுக்கு வரவழைத்து அஜித் சந்தித்துள்ளார். இதனை தனது ட்விட்டரில் பகிர்ந்த குற்றாலீஸ்வரன் ‘கற்பனைக்கு எட்ட முடியாத சந்திப்பு’ என்று பதிவிட்டுள்ளார். அஜித் அவரிடம் நான்தான் உங்கள் ரசிகன் என்று கூறியுள்ளார். அஜித்தின் எளிமையும், விளையாட்டுத் துறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும் அறிந்து குற்றாலீஸ்வரன் ஆச்சரியப்பட்டார்.

  திறமையான இளைஞர்கள் விளையாட்டுத் துறைகளில் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த உதவும் வகையில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அகாதெமி ஒன்றை அமைப்பதுதான் அஜித்தின் நீண்ட காலக் கனவு. இந்தச் சந்திப்பின் மூலம் அஜித் தனது கனவு திட்டத்தை உறுதிபடுத்தியிருக்கிறார். அஜித் ஒரு முடிவை எடுத்துவிட்டால், பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai