தங்க நிறத்தில் உடையணிந்து மீண்டுமொரு இனிய சந்திப்பு!
By DIN | Published on : 03rd December 2019 08:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

1980 actors re-union
1980-ம் ஆண்டுகளில் தென்னிந்திய சினிமாவில் வெற்றிக் கொடி கட்டிய திரை நட்சத்திரங்கள் ஒவ்வொரு ஆண்டும் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்தச் சந்திப்பு, இந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்தாண்டு சீரஞ்சிவி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரஜினி - கமல் கலந்து கொள்ளவில்லை.
ரஜினிக்குச் சொந்தப் பணிகள் இருந்ததாலும், கமல் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருப்பதாலும் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்தச் சந்திப்பில் அனைத்து நட்சத்திரங்களும் தங்க நிறத்தில் உடையணிந்து வந்திருந்தனர். அந்தக் காலக் கட்ட நினைவுகளை அனைவரும் பகிர்ந்து கொண்டனர்.
ஆடல், பாடல் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சிறுசிறு விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மோகன்லால், நாகார்ஜுனா, கே.பாக்யராஜ், பிரபு, ஜெயராம், சுரேஷ், ரகுமான், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், வெங்கடேஷ், ஜெகபதி பாபு, சுமன், ஷோபனா, நதியா, ராதா, அமலா, ரேவதி, ரமேஷ் அரவிந்த், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்தப் புகைப்படங்களைத் தங்களது இணையதளப் பக்கங்களில் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.