வெளியானது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 'குயின்' வெப் சீரிஸ் ட்ரைலர் (விடியோ)

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 'குயின்' வெப் சீரிஸின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
குயின்' வெப் சீரிஸ்
குயின்' வெப் சீரிஸ்

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 'குயின்' வெப் சீரிஸின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்து, பின்னர் அரசியலில் நுழைந்து இளம் வயதிலேயே தமிழக முதலவர் ஆனவர் ஜெயலலிதா. இவரது  வாழ்க்கை வரலாற்றை இருவர் தமிழில் தற்போது படமாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 'குயின்' வெப் சீரிஸின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குநர் கௌதவ் வாசுதேவ் மேனன் மற்றும் கிடாரி' திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன்   இருவரும் இணைந்து இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்துள்ளார்.

சிறுவயது ஜெயலலிதாவாக 'விஸ்வாசம்' படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிஹா நடித்துள்ளார். இளமைக்கால ஜெயலலிதாவாக துருவங்கள் 16 படத்தின் நாயகியான அஞ்சனா ஜெயபிராகாஷ் நடித்துள்ளார்.

இன்று வெளியாகியுள்ள ட்ரைலரில் ஜெயலலிதாவின் பள்ளிக்காலம், இளமைக்காலம், திரையுலக பிரவேசம் மற்றும் அரசியல் பிரவேசம் துவங்கி எம்ஜிஆர் இறப்பு வரையிலான பல காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன.

இந்த் தொடரில் ஜெயலலிதாவின் பெயர் சக்தி சேஷாத்ரி என்றும் எம்.ஜி.ஆர் பெயர் ஜி.எம்.ஆர் எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று வெளியான இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com