ஹைதராபாத் என்கவுன்டர் நியாயமானதே: நயன்தாரா பாராட்டு

உண்மையான கதாநாயகர்களான தெலங்கானா காவல்துறை தங்கள் செயலில் இதை நிரூபித்துள்ளார்கள்.
ஹைதராபாத் என்கவுன்டர் நியாயமானதே: நயன்தாரா பாராட்டு

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை போலீஸாா் என்கவுன்ட்டரில் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா்.

இந்த விவகாரம் குறித்து பிரபல நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:

சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை.

இந்தத் திரைப்படச் சொற்றொடர் இன்று நிஜமாகியுள்ளது. உண்மையான கதாநாயகர்களான தெலங்கானா காவல்துறை தங்கள் செயலில் இதை நிரூபித்துள்ளார்கள். மனித நேய மிக்க செயல் என இதை அழைப்பேன். நேற்றைய தினத்தை பெண்களுக்கு நியாயம் கிடைத்த நாளாகக் குறித்து வைத்துக்கொள்ளலாம். அனைவரிடமும் சரிசமமாக அன்பை, மரியாதையைச் செலுத்துவதே மனித நேயமாகும். 

நீதி கிடைத்துள்ளது மகிழ்ச்சி என்றாலும் இதுதொடர்பாக நம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். முக்கியமாக பையன்களுக்கு, எப்போது இந்த உலகைப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்றுகிறார்களோ அப்போது ஆண்கள் கதாநாயகர்கள் ஆகிறார்கள் என்பதை என அறிக்கையில் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com