'மறுமலர்ச்சி மனிதர்’ பட்டம் பெற்ற உலக நாயகன்

இந்தியாவிலுள்ள மிகச் சிறந்த பிரபலங்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல்  பிரபலங்களின் புகழ் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது
'மறுமலர்ச்சி மனிதர்’ பட்டம் பெற்ற உலக நாயகன்

இந்தியாவிலுள்ள மிகச் சிறந்த பிரபலங்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல்  பிரபலங்களின் புகழ் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.  இதில் முதலிடத்தில் இருப்பவர்  இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி. இந்தப் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு 2-ம் இடமும், சல்மான் கானுக்கு 3-ம் இடமும், அமிதாப் பச்சனுக்கு 4-ம் இடமும் கிடைத்ததுள்ளது.  கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி இந்த ஆண்டு ஐந்தாம் இடத்தில் உள்ளார்.

8 ஆண்டுகளாக முதல் 7 இடங்களில் தொடர்ந்து இடம் பிடித்துள்ள பிரபலம் இவர் ஒருவர்தான் என பாராட்டி வருகின்றனர் தோனி ரசிகர்கள்

2013 - 2
2014 - 4
2015 - 4
2016 - 5
2017 - 7
2018 - 5
2019 - 5

தமிழ் நடிகர்களைப் பொருத்தவரையில் ரஜினி 13-ம் இடத்தில் உள்ளார். தென்னிந்திய நடிகர்களுள் ரஜினிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.  56-ம் இடத்தைப் பிடித்துள்ள கமல்ஹாசன், பன்முகத் தன்மை உடைய ‘மறுமலர்ச்சி மனிதர்’ என்ற தலைப்புடன் ஃபோர்ப் அட்டைப் படத்தை அலங்கரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்ப்ஸ் 2019 பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்த தென்னிந்திய நடிகர்கள், 13. ரஜினி, 16. ஏ.ஆர். ரஹ்மான், 27. மோகன் லால், 44. பிரபாஸ், 47. விஜய், 52. அஜித், 54. மகேஷ் பாபு, 55. ஷங்கர், 56. கமல், 62. மம்மூட்டி, 64. தனுஷ், 77. திரிவிக்ரம், 80. இயக்குநர் சிவா, 84. கார்த்திக் சுப்பராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com