எந்தப் படம் விருது வாங்கும்?

ஆஸ்கர் விருதுக்கு சமமாக தரப்படும் விருது கோல்டன் ஈகிள் விருதுகள்தான். திரையுலகில் சிறந்து விளங்குவோருக்கும்
எந்தப் படம் விருது வாங்கும்?

ஆஸ்கர் விருதுக்கு சமமாக தரப்படும் விருது கோல்டன் ஈகிள் விருதுகள். திரையுலகில் சிறந்து விளங்குவோருக்கும், சிறந்த திரைப்படங்களுக்கும் ரஷ்யாவில் வழங்கப்படும் விருது இது. தி லயன் கிங், ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் மற்றும் கிரீன் புக் உள்ளிட்ட மூன்று படங்கள் சிறந்த அயல்நாட்டு படப்பிரிவில் தேர்வாகியுள்ளன.

வரும் ஜனவரி 24, 2020-இல் மாஸ்கோ மாஸ் ஃபிலிம் ஸ்டுடியோவில் நடைபெறும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த படத்துக்கான கோல்டன் ஈகிள் விருதுகள் அளிக்கப்பட உள்ளன. இந்த மூன்று படங்களும் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மற்ற நாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com