வெளியானது தளபதி 64-இன் புதிய அப்டேட்!

தளபதி 64 படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
வெளியானது தளபதி 64-இன் புதிய அப்டேட்!


தளபதி 64 படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தற்காலிகமாக 'தளபதி 64' என குறிப்பிடப்பட்டு வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் விஜய் கைகோர்த்ததில் இருந்தே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை அடைந்தது. இதன்பிறகு, விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் இணைய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அடுத்த கட்டத்துக்குச் சென்றது. இதன்பிறகு, சாந்தனு, மாளவிகா மோகனன் என நடிகர் பட்டாளமே படத்தில் இணைந்தனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் புதிய அப்டேட் குறித்த அறிவிப்பு இன்று (சனிக்கிழமை) வெளியாகும் என படக்குழுவினர் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி மாலை 6 மணிக்கு படக்குழுவினர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். அனைவரும் எதிர்பார்த்தபடியே அடுத்த அப்டேட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை குறித்தே அமைந்துள்ளது. 

தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன்மூலம், இந்தப் புத்தாண்டு விஜய் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாய் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த அறிவிப்பு குறித்து டிவிட்டரில் வெளியிடுகையில், விஜய் ரசிகர்கள் தயாராக இருக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com