சபரிமலை விவகாரம்: கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி!

சபரிமலைப் பிரச்னையில் நான் கேரள முதல்வர் பினராயி விஜயன் பக்கம் நிற்கிறேன்...
சபரிமலை விவகாரம்: கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி!

சபரிமலை கோயிலில் பாலின அடிப்படையில் பெண்களுக்குப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி, அங்கு வழிபாடு நடத்த பெண்களுக்கு இருந்த தடையைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் நீக்கியது. இந்த அமர்வில் இடம்பெற்றிருந்த 5 நீதிபதிகளில், பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டுமே பெண்களுக்கு எதிரான தடையை நீக்க எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்தத் தீர்ப்புக்கு எதிராக சபரிமலை கோயில் அமைந்துள்ள கேரள மாநிலத்திலும், தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. முக்கியமாக கேரளத்தில் பல்வேறு அமைப்பினர் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பல்வேறு தரப்பினர் சார்பில் சுமார் 48 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வரும் 6-ஆம் தேதி மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட உள்ளது.

விஜய் சேதுபதி சமீபத்தில் கேரளாவில் அளித்துள்ள பேட்டியில் சபரிமலை விவகாரம் குறித்து தன்னுடைய கருத்தைக் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: 

ஓர் ஆணாக வாழ்வது சுலபம். ஆனால் பெண்களுக்கு அப்படி அல்ல. ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கினால் பெண்களை வலியை அனுபவிக்கிறார்கள். பெண்கள் கடவுளைப் போன்றவர்கள். மாதவிலக்கு தூய்மையானது அல்ல என்று யார் சொன்னது? உண்மையில் அது மிகவும் புனிதமானது. சபரிமலைப் பிரச்னையில் நான் கேரள முதல்வர் பினராயி விஜயன் பக்கம் நிற்கிறேன். அவர் சொல்வது சரி. இதுகுறித்து ஏன் இவ்வளவு சர்ச்சைகள் என்று பேட்டியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com