சுடச்சுட

  

  திருமணப் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்ட செளந்தர்யா ரஜினி!

  By எழில்  |   Published on : 12th February 2019 12:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  soundarya_wed2211111

   

  வஞ்சகர் உலகம் படத்தில் நடித்த நடிகர் விசாகனை ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா நேற்று திருமணம் செய்துள்ளார். 

  கோவை முன்னாள் எம்எல்ஏ பொன்முடியின் சகோதரரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகன். வஞ்சகர் உலகம் படத்தில் நடித்துள்ள விசாகனுடன் செளந்தர்யா ரஜினிகாந்துக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. விசாகன் ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். அமெரிக்காவில் எம்பிஏ படித்து தமிழ்நாட்டில் மருந்துகள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

  நேற்று நடைபெற்ற திருமணத்தில் ஏராளமான திரைப் பிரபலங்களும் முக்கியப் புள்ளிகளும் கலந்துகொண்டார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

  2010-ல் தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்தார் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா. இவர்களுக்கு வேத் என்கிற மகன் உண்டு. செளந்தர்யா - அஷ்வின் இடையே கருத்துவேறுபாடு நிலவியதால், இருவரும் 2016-ல் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார்கள். பிறகு இருவருக்கும் விவகாரத்து வழங்கப்பட்டது. இதையடுத்து செளந்தர்யா நேற்று மறுமணம் செய்துள்ளார். 

  இந்நிலையில் திருமணம் முடிந்தபிறகு தனது திருமணப் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டார் செளந்தர்யா. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai