சுடச்சுட

  

  ரஜினியை அடுத்து அஜித்துடன் மோத களம் இறங்கும் சிவகார்த்திகேயன் 

  By DIN  |   Published on : 13th February 2019 08:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ajitha_SK

   

  சென்னை: இந்த ஆண்டு பொங்கலுக்கு ரஜினிகாந்தின் 'பேட்ட' படமும், அஜித்தின் 'விஸ்வாசம்' படமும் மோதியது போல, அடுத்து அஜித்தும் சிவகார்த்திகேயனும் மோதவுள்ளனர்.    

  2016-ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்த படம் 'பிங்க்'. அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளிவந்த இப்படம் சிறப்பான வெற்றி பெற்றது. 

  இந்தப் படத்தை 'சதுரங்க வேட்டை' எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார், வித்யா பாலன் நடிப்பில் தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக, பாலிவுட் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் அறிவித்திருந்தார்.

  விரைந்து தயாராகி வரும் இந்தப் படத்தை 2019 மே 1 அஜித் பிறந்தநாளன்று வெளியிட திட்டமிட்டிருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது.

  இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரஜினிகாந்தின் 'பேட்ட' படமும், அஜித்தின் 'விஸ்வாசம்' படமும் மோதியது போல, அடுத்து அஜித்தும் சிவகார்த்திகேயனும் மோதவுள்ளனர்.    

  ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், 'சிவா மனசுல சக்தி' ராஜேஷ் இயக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ எனும் படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவித்திருந்தார்கள்.

  தற்போது ‘மிஸ்டர் லோக்கல்’ படமும் மே 1 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக சற்றுமுன்பு தயாரிப்புத் தரப்பில் ட்விட்டரில்  அறித்துள்ளார்கள்.

  எனவே இம்முறை இவர்கள் இருவரிடையே போட்டியா என்று ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai