சுடச்சுட

  

  மார்ச் மாதம் திருமணம்: காதலர் தினத்தன்று தகவல் தெரிவித்த ஆர்யா & சயீஷா!

  By எழில்  |   Published on : 14th February 2019 01:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  arya_sayeesha11xx

   

  பிரபல பாலிவுட் நடிகர்களான சாயிரா பானு, திலீப் குமாரின் உறவினரான சயீஷா, தமிழில் வனமகன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடித்த சயீஷாவுக்கு அவருடன் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறி, தற்போது திருமணமாக மலரவுள்ளது. இருவரும் தற்போது காப்பான் என்கிற கே.வி. ஆனந்தின் படத்திலும் நடித்துவருகிறார்கள்.

  ஆர்யா (38) - சயீஷா (21) ஆகியோரின் காதல் திருமணம், மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக காதலர் தினமான இன்று அறிவித்துள்ளார்கள் ஆர்யாவும் சயீஷாவும். இதுகுறித்து அவரவர் ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இதையடுத்து சமூகவலைத்தளங்களில் இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai