நடிகர் அபி சரவணன் குறித்து நடிகை அதிதி மேனன் காவல் ஆணையர் நிலையத்தில் புகார்!

2016 முதல் அபி சரவணன் மீது அன்பான உறவு இருந்தது. ஆனால்...
நடிகர் அபி சரவணன் குறித்து நடிகை அதிதி மேனன் காவல் ஆணையர் நிலையத்தில் புகார்!

பட்டதாரி, கேரள நாட்டிளம் பெண்களுடனே ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் அபி சரவணன். சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். அட்டக்கத்தி படத்தில் துணை நடிகராக அறிமுகமானார். 2016-ல் பட்டதாரி படத்தில் அதிதி மேனனுடன் இணைந்து நடித்தார். இது காதலாகவும் மாறியது. பிறகு, இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் தற்போது கருத்துவேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்துள்ளார்கள். இந்நிலையில், தனது மகன் அபி சரவணை யாரோ கடத்தி விட்டதாக அவருடைய தந்தை ராஜேந்திர பாண்டியன் சில நாள்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நடிகை அதிதி மேனன் ஆள்கள் வைத்து அபி சரவணைக் கடத்தியதாகவும் கூறப்பட்டது. இதன்பிறகு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி, தன்னை யாரும் கடத்தவில்லை என அபி சரவணன் கூறினார்.

இதையடுத்து நடிகை அதிதி மேனன், அபி சரவணன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

பட்டதாரி படத்தில் என்னுடன் இணைந்து நடித்தார் அபி சரவணன். நான் அவரைத் திருமணம் செய்துகொண்டு அவருடைய பொருள்களை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாகவும் ஏமாற்றிவிட்டதாகவும்  முதலில் என்னைப் பற்றி தவறான செய்தி வந்தது. அடுத்ததாக, இன்னொரு நபருடன் நான் ஓடிவிட்டதாகவும் அவருடன் இணைந்து வாழ்வதாகவும் என்னைப் பற்றி தவறான செய்திகள் வெளிவந்துள்ளன. 2016 முதல் அபி சரவணன் மீது அன்பான உறவு இருந்தது. ஆனால் அதன்பிறகு அவர் சமூக  சேவை செய்வதாகப் பணம் பெற்று பிரச்னைகள் உருவாகின. இதில் என்னையும் மாட்டிவிடுவார் என்றொரு சூழ்நிலை வந்தது. இது சரியாக வராது என்று இதுபற்றி பேசியபோது எங்களிடையே வாக்குவாதம் உண்டானது.  மேலும் ஒரு கதாநாயகியுடன் மூன்று வருடம் அவருக்கு உறவு இருந்தது. இதுதொடர்பாக அபி சரவணனுடன் எனக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பிரிந்துவிடலாம் என்று முடிவு செய்து பிரிந்துவிட்டோம்.

அதன்பிறகு நான் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு, உன்னை நான் திருமணம் செய்துகொண்டுவிட்டேன் என்று சொல்லிப் பார்த்தார். இதனால் நான் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். அதற்கு ஆதாரமாக ஒரு போலிச் சான்றிதழைச் சமர்ப்பித்தார். இந்த ஜனவரியில் என்னுடைய ட்விட்டர் கணக்கு, மின்னஞ்சல் கணக்கு போன்றவை ஹேக் செய்யப்பட்டன. இதனால் என்னுடைய தனிப்பட்டத் தகவல்கள் திருடப்பட்டன. தொடர்ந்து என்னைப் பற்றிய தவறான செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. இதனால் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். மதுரை நீதிமன்றத்தில் தவறான ஆவணங்கள் அளித்தது, சைபர் கிரைம் குற்றங்கள் செய்தது, வீட்டுக்கு வந்து சகோதரியைத் தாக்கியது எனப் புகார்கள் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com