
உலக திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் இன்று வழங்கப்பட்டுள்ளன. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், நடிகை உள்பட பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
சிறந்த திரைப்படப் பிரிவில், பிளாக் பாந்தர், கிரீன் புக், ரோமா, எ ஸ்டார் இஸ் பார்ன், வைஸ், தி ஃபேவரிட், பிளாக்கிளான்ஸ்மேன், போஹிமியன் ராப்úஸாடி ஆகியவை பரிந்துரைக்கப்பட்டன. இதில் கிரீன் புக் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றது.