சுடச்சுட

  

  இந்தியாவில் வெளியான 2-வது வாரத்தில் ரூ. 200 கோடி வசூலை எட்டிய ஹிந்திப் படம்!

  By எழில்  |   Published on : 11th January 2019 03:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  simmba12xx

   

  படம் வெளியான 2-வது வாரத்தில் ரூ. 200 கோடி வசூலை எட்டி அசத்தியுள்ளது ஹிந்திப் படமான சிம்பா.

  பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள படம் - சிம்பா. ரன்வீர் சிங், சாரா அலி கான், அபூர்வா மேத்தா போன்றோர் நடித்துள்ள இப்படம் டிசம்பர் 28 அன்று வெளியானது.

  முதல் 3 நாள்களில் ரூ. 50 கோடி வசூலை இந்தியாவில் எட்டிய சிம்பா படம், 5-வது நாளிலேயே ரூ. 100 கோடி வசூலைத் தொட்டது. ரூ. 150-வது கோடி வசூலை முதல் வாரத்திலும் ரூ. 200 கோடி வசூலை 12-வது நாளிலும் அடைந்து சாதனை படைத்துள்ளது. 2 வாரங்களில் மொத்தமாக இந்தியாவில் ரூ. 212 கோடி வசூலித்துள்ளது. மேலும் இந்தப் படம் வெளிநாடுகளில் இதுவரை ரூ. 80 கோடியை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் உலகளவில் இப்படத்தின் வசூல் விரைவில் ரூ. 300 கோடியை அடையவுள்ளது. 

  2018-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான பத்மாவத் படம் ரூ. 300 கோடி வசூலை எட்டியது. இந்நிலையில் வருடக்கடைசியில் வெளியான சிம்பா படத்தின் வசூல் ரூ. 200 கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த வருடம் பத்மாவத், சஞ்சு, சிம்பா ஆகிய 3 ஹிந்திப் படங்களும் இந்தியாவில் மட்டும் ரூ. 200 கோடி வசூலை எட்டியுள்ளன. 2018-ல் ரூ. 100 கோடியைத் தொட்ட 13-வது ஹிந்திப் படம் இது. 

  ரோஹித் ஷெட்டி இயக்கிய படங்களில் இந்தியாவில் ரூ. 100 கோடியை வசூலித்துள்ள எட்டாவது படம். இயக்குநர்களில் வேறு யாருக்கும் இத்தனை ரூ. 100 கோடி ஹிட் படங்கள் கிடையாது. ரன்வீர் படங்களில் இந்தியாவில் ரூ. 100 கோடியை எட்டியுள்ள நான்காவது படம் இது. 

  இந்தியாவில் வரி நீங்கலாக ரூ. 300 கோடியை எட்டியுள்ள ஹிந்திப் படங்கள்: பிகே (2014), பஜ்ரங்கிபைஜான் (2015), சுல்தான் (2016), டங்கல் (2016), பாகுபலி 2 (2017), டைகர்ஜிந்தாஹை (2017), பத்மாவத் (2018), சஞ்சு (2018). இப்படங்களில் ரூ. 500 கோடியைத் தாண்டிய ஒரே படம் - பாகுபலி 2 (ஹிந்தி டப்பிங்).

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai